தமிழ்நாடு

“இந்த மழை வெறும் ஆரம்பம்தான்; தயாராக இருக்க வேண்டும்” - ஆய்வுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி !

“இந்த மழை வெறும் ஆரம்பம்தான்;  தயாராக இருக்க வேண்டும்” - ஆய்வுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரும் மழைக்காலங்களையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.10.2024) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரும் மழைக்காலங்களையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாவது,

“கடந்த 14 ந் தேதி, 15 ந் தேதி, 16 ந் தேதி ஆகிய நாட்களில் பெய்த மழையின் போது மழை நீரை அகற்றும் பணியில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றிட 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இரவு, பகலாக சிறப்பாக பணிகளை மேற்கொண்டீர்கள்.

அவ்வளவு மழை நீரும் சில மணி நேரங்களிலேயே வடிந்து சென்றது. சில பகுதிகளில் மோட்டார் வைத்து நீர் அகற்றப்பட்டது. சில மணிநேரங்களிலேயே பொதுமக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். அடுத்த நாட்களில் மழை பெய்த சுவடு கூட தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“இந்த மழை வெறும் ஆரம்பம்தான்;  தயாராக இருக்க வேண்டும்” - ஆய்வுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி !

தற்போது பெய்துள்ள மழை வெறும் ஆரம்பம்தான். நவம்பர் மாதத்தில்தான் தீவிர மழைக்காலம் ஆரம்பமாகும் என்று நம்முடைய வானிலை ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளார்கள். கடந்த 19.10.2024 அன்று மதிப்பிற்குரிய நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நீங்கள் கற்றுக் கொண்ட அனுபவங்கள் குறித்து இங்கே தெரிவிக்கலாம்.

நீங்கள் நியமிக்கப்பட்டுள்ள பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை, வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தெரிவிக்கவும். நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகளை சென்னை பெருநகர மாநகராட்சி பராமரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். 14.10.2024 அன்று இரவு, பருவமழையினால் நாராயணபுரம் ஏரிக்கரையில் சேதமடைந்த பகுதிகள், அந்த ஏரியின் shutter பகுதி மற்றும் கீழ்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாயின் உடைப்பு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது நீர்வளத்துறை அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் இங்கே தெரிவிக்க வேண்டும். ஒக்கியம் மடுவு பகுதியில் பார்வையிட்டோம். அங்கு தெரிவித்த ஆலோசனைகளுக்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

அதேபோல் எண்ணூர் முகத்துவாரத்தில் படிந்துள்ள (FLY ASH) சாம்பல் கழிவுகளை அகற்றுவதற்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். உடனே முதலமைச்சர் அவர்கள் உடனடியாக வடசென்னை அனல் மின் நிலையத்தின் நிதி உதவியாக ரூ.28.00 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார்கள். தற்பொழுது நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் இங்கே தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அடுத்த 15 நாட்களில் கண்காணிப்பு அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மண்டலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்பு நடவடிக்கைகள் எவை, எவை என்றும், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்." என்றார்.

“இந்த மழை வெறும் ஆரம்பம்தான்;  தயாராக இருக்க வேண்டும்” - ஆய்வுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி !

இக்கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களின் விவரங்கள், அந்த இடங்களில் மழைநீர் வடிய எடுத்துக் கொண்ட நேரம், மழைநீர் கால்வாய்கள் மூலம் நீர் வடிந்து சென்ற இடங்களின் விவரங்கள், மோட்டார் பம்ப் வைத்து நீர் அகற்றப்பட்ட இடங்களின் விவரங்கள் என்று விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மழையின்போது மின்தடை செய்யப்பட்ட பகுதிகள், எவ்வளவு மணி நேரத்தில் மின் இணைப்பு அந்த இடங்களுக்கு வழங்கப்பட்டன. மின்இணைப்பு துண்டிக்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட, படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை பெருநகர மாநகராட்சி, நீர்வளத்துறை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் குறித்தும், பிற பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

வருகின்ற அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் கூடுதல் கவனத்துடன் அனைத்துதுறை அலுவலர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். சென்ற மழையின்போது மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களுடைய நன்மதிப்பை நாம் பெற்றோம். எதிர்காலத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்து இந்த அரசிற்கு நற்பெயரை பெற்றுத் தர நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன் என்று தமிழ்நடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories