தமிழ்நாடு

“எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை, சொல்லுங்கள்..” - விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் மா.சு. கேள்வி!

யூடியூபர் இர்பான் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை, சொல்லுங்கள்..” - விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் மா.சு. கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ஜாபர்கான்பேட்டை சுந்திரமூர்த்தி தெரு பகுதியில், புதிய 250 KVA மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மின்மாற்றியை மக்களை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “Over load இருக்கும் மின்மாற்றிகளை கண்டறிந்து கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் 7 இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து  புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 139வது வட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் 250 KVA மின்மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 தெருகளை சார்ந்த சுமார் 1500 வீடுகளுக்கு பயன்பெறும்.

“எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை, சொல்லுங்கள்..” - விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் மா.சு. கேள்வி!

Youtuber இர்ஃபான் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்த பிறகு அதற்கான பதில் பெறப்படும். சம்பந்தப்பட்ட Youtuber மற்றும் மருத்துவமனையின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. DMS சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள்.

இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆகவில்லை. துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ எடுக்கப்பட்டுள்ளது. இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும்.

“எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை, சொல்லுங்கள்..” - விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் மா.சு. கேள்வி!

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழப்பை தவிர்க்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள், தாய்மார்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரசவங்கள் சுகப்பிரசவமாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் பிரசவத்தின்போது குழந்தை இறப்பு இல்லாத மாவட்டமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் இந்த இலக்கை எட்ட மருத்துவர்களை அறிவுறுத்தி வருகிறோம்.

தனியார் மருத்துவமனைகளில் திட்டமிட்டே பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்று நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவத்துறையோடு, தனியார் மருத்துவத்துறையும் இணைந்து கடமை செய்தால்தான் மக்களுக்கான சேவையை செய்ய முடியும். இது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

“எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை, சொல்லுங்கள்..” - விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் மா.சு. கேள்வி!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரின் தலைவர் பழனிசாமிக்கும் பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். எந்த மருத்துவமனையில் எந்த மருந்து இல்லை என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். விஜயபாஸ்கர் அவரின் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்யலாம். அவரை யாரும் தடுக்கப்போவது இல்லை. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து மருந்துகள் இல்லை என்பதை அவர் நிரூபிக்கலாம். ஆனால் பேட்டி மட்டும் கொடுப்பதில் அர்த்தமில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் அப்போதைய அமைச்சர் எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்? இந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும், அவர்கள் 10 ஆண்டுகளில் செய்ததையும் ஒப்பீடு செய்து நாங்கள் செய்ததில் 10% ஆவது அவர்கள் செய்திருந்தது குறித்த அவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories