தமிழ்நாடு

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பல் கைது! : நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பல் கைது! : நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்தார்.

அப்போது, நாமக்கல் அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர். ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பல் கைது! : நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் அருகே, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை காவல்துறை நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற காவல்துறை கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளை கும்பலை பிடித்தனர்.

இந்த சம்பவத்தை பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது, ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமையவர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories