திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை எழுத்து ஊடகத்தில் முன்மொழிந்து வரும் முரசொலியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்த, முரசொலி செல்வம் மறைவை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “எனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைமை வரும் என நான் எண்ணியதில்லை. எனது வாழ்க்கையில் எனது தந்தை, தாய், தந்தை என பலரை இழந்து உள்ளேன் அதன் துயரங்கள் அதிக அளவில் என்னை தாக்கியுள்ளது. ஆனால் என் நண்பர் முரசொலி செல்வம் அவர்கள் மறைந்தார் என்பதனை கூறுவதற்கு எனக்கு மனமில்லை.
அதன் காரணமாக தான் அவரது இறுதி நேரத்திலும் நான் மலர்த்துவ மறுத்து விட்டேன். எனது 60 ஆண்டுகால இணைப்பிரியாத நண்பர் முரசொலி செல்வம். எங்கள் இருவரிடமும் எந்தவிதமான கசப்பும் இதுவரை வந்ததில்லை.
நட்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தவர் தான் முரசொலி செல்வம் அவர்கள். 1962 ஆம் ஆண்டிலிருந்து எங்களது நட்பு ஆரம்பமானது. முரசொலிசெல்வம் எனக்கு ஒரு நண்பர் மட்டுமல்ல, எனக்கு ஒரு ஆசிரியர் என்று தான் அவரை நான் கூற வேண்டும்.
குறிப்பாக வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது பிரச்சனை காலங்களில் எவ்வாறு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு ஒரு ஆசிரியராக வழிகாட்டியவர் முரசொலி செல்வம் அவர்கள் தான்.
அப்படிப்பட்ட ஒரு நபர் மறைந்து விட்டார் என்பது என்னால் நம்ப முடியாத ஒரு செய்தி. அவர் ஒரு விசித்திரமான மனிதர் அவர் நினைத்திருந்தால் எந்த பதவியை வேண்டுமானாலும் திமுகவில் பெற்றிருக்கலாம்.
அவர் எந்த பதவிக்காகவும் கழகத்திற்கு வருக வில்லை கழகத்தை தாண்டியும் எந்த பதவியையும் அவர் விரும்பவில்லை. ஆனால் அவர் நினைத்தவர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆக்கியுள்ளார். அதை ஆக்கக்கூடிய சக்தி அவருக்கு இருந்தது. ஆனால், அவர் ஆக்க வேண்டியவர்களை மட்டுமே பதிவில் அமர்த்தி ஆளாக்கினார்.
எந்த நேரத்திலும் தனது உறவு முறைகளை வைத்து யாரிடமும் அடையாளம் தேடாத ஒரு நபர்தான் முரசொலி செல்லும் அவர்கள். அதில் இறுதிவரை மிக உறுதியாகவும் தெளிவாகவும் ஆடம்பர விளம்பரத்தை விட்டு தள்ளி இருந்தவர் தான் முரசொலி செல்வம் அவர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு. ஆனால், கட்சியிலும் சரி வாழ்க்கையில் சரி எதிர்ப்பே இல்லாதவர் ஒருவர் உண்டு என்றால் அது முரசொலி செல்வம் அவர்கள் தான். அதற்குக் காரணம் என்னவென்றால் அவர் யாரும் புண்படுத்து பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
அவர் ஏற்றுக்கொண்ட பதிவியை சரியாக செய்யக்கூடியவர். எல்லாரையும் அடையாளம் கண்டு வைத்திருக்கக் கூடியவர் முரசொலிசெல்வம். முரசொலி செல்வம் அவர்கள் மீது பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அபிரிவிதமான ஒரு பாசம் இருந்தது” என உருக்கத்துடன் பேசினார்.