தமிழ்நாடு

கவரப்பேட்டை ரயில் விபத்து - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்ட கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக்டோபர் 11- ஆம் நாள் இரவு, சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலர் (கார்டு), பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சேர்ந்த 40 ரயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

கவரப்பேட்டை ரயில் விபத்து - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. அப்போது 40 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில், இந்திய ரயில்வே சட்டப்பிரிவு - 150ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்வே காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories