இந்தியா

“அரசியல்வாதிகளை புகழ்வது, நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது” : நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டனம்!

“அரசியல்வாதிகளை புகழ்வது, நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது” : நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

குஜராத் உயர்நீதிமன்றத்தின் சார்பில், நீதித்துறை நிர்வாகிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட இரு நாள் கருத்தரங்கில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது நாட்டில் நிலவுகிற பல்வேறு சிக்கல்களையும், அதனை நீதித்துறைகள் கையாளும் விதத்தினையும் எடுத்துரைத்து, பல்வேறு நெறிமுறைகளை நீதித்துறையினரிடையே விளக்கினார்.

அவர் பேசியதாவது, “இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியின் கீழ் ஆட்சி நடப்பது மட்டுமே, மக்களாட்சியாகிட முடியாது. அம்பேத்கரின் வழியில், இந்திய அரசியலமைப்பின் வழியில், அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே, உண்மையான மக்களாட்சி.

“அரசியல்வாதிகளை புகழ்வது, நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது” : நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டனம்!

இதனை நிறைவேற்றுகிற பொறுப்பு, அரசியல் சார்பற்ற நீதித்துறைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நீதித்துறையினர், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதும், அரசியல்வாதிகளை புகழ்வதும், தான் வகிக்கும் பதவியிலிருந்து விலகி, தேர்தலில் போட்டியிடுவதும், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை சீர்குலைக்கும்.

மேலும், பெண்கள் மீதும், அல்லது குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் கண்டிக்கத்தக்க விமர்சனங்களை முன்வைப்பது, இந்திய அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. அது போன்ற நடவடிக்கைகளை அறவே தவிர்த்திட வேண்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories