தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் : பிரதீப் ஜான் சொல்வது என்ன?

இன்று சென்னைக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் : பிரதீப் ஜான் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

மேலும் சென்னைக்கு இன்று அதித கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், அரசு சார்பில் தாழ்வான பகுதிகளில் படகுகள், பேரிடர் மீட்பு குழு என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்காமல், ஆந்திராவை நோக்கி நகர்வதால் அதி கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளது.

இது குறித்து சமூகவலைதளத்தில் அப்டேட் கொடுத்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்,” சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த சில மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களில் சீரான அளவிலேயே மழை தொடரும்.

சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்த்து ஆந்திராவை நோக்கியுள்ளது. இதனால் சென்னைக்கு அதிகன மழை வாய்ப்பு குறைந்துள்ளது. சாதாரண மழை மட்டுமே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories