தமிழ்நாடு

நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன ?

நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகனமழை பெய்தது. இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.

நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன ?

இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திராவின் நெல்லூரில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது..

இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டிய புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே நாளை காலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழையின் அளவு அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories