தமிழ்நாடு

’வாங்க டீ சாப்பிடலாம்..” : அன்போடு அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நெகிழ்ந்த முன்களப் பணியாளர்கள்!

முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’வாங்க டீ சாப்பிடலாம்..” : அன்போடு அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நெகிழ்ந்த முன்களப் பணியாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.சென்னை புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாகஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களைப் பாராட்டினார்.

அவர்களை அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த செயலை முன்களப்பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டினார்கள்.

முதலமைச்சர் அவர்களே, தங்களை அழைத்துச்சென்று தேநீர் வாங்கித்தந்து உதவி உற்சாகப்படுத்தியது அவர்களின் பெருந்தன்மையையும் மனித நேயத்தையும் புலப்படுத்துகின்றன.

முதலமைச்சர் அவர்கள் அளித்துள்ள ஊக்கம் மேலும் தங்களை பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர்.

அதே போன்று தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories