தமிழ்நாடு

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு : பால்வளத்துறை தகவல்!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு : பால்வளத்துறை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுறுவதை தவிர்க்க, ஆவின் நிறுவனம் மற்றும் பால்வளத்துறை இணைந்து கீழ்கண்ட முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

1. கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் 1/2 கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2. 50,000 எண்ணிக்கையில் 1/2 லிட்டர் பால் (UHT) 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய பால் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

3. சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு : பால்வளத்துறை தகவல்!

4. கால்நடை தீவனம் சுமார் 500 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

5. தாதுப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories