தமிழ்நாடு

நிதியை மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? : ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி!

நிதியை மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? என ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதியை மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? : ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் நமது மாநிலத்தில், இந்த கொள்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு கூறுவது எந்த விதத்தில் நியாயம்?” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்காக ரூ. 44 ஆயிரத்து 42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கா விட்டாலும், தமிழ்நாடு அரசு தனது நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு,ஒன்றிய அரசின் நிதி முதல் தவணை ரூ. 573 கோடி விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் 32,292 பேருக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து ஊதியம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு பல்வேறு காரணங்களை கூறி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடர்ந்து டெல்லி சென்று துறை செயலாளரை பார்த்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கொண்டு 27 பயன்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்து SSA பிரிவின் கீழ் செயல்படுகிறது.

மலைப்பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு எஸ்கார்ட் என்ற திட்டம் மூலம் 32 ஆயிரம் பிள்ளைகள் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை SSA நிதி மூலமாக மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். சிறப்பு குழந்தைகளுக்கான செயல்பாடுகள், பள்ளிகளில் கலை பண்பாட்டு துறை கொண்டாட்டம்,எண்ணும் எழுத்தும் திட்டம், ஹைடெக் கிளாஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிதியில் திடீரென, எந்தவித காரணமும் இல்லாமல் கை வைக்கிறார்கள். மாநிலத்தில் எங்கள் கொள்கைகளை சேர்த்துக்கொண்டால் மட்டுமே பணம் தர முடியும் என்பது எந்த விதத்தில் நியாயம்?. கல்வித்துறை என்பது அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய துறையாகம். எனவே எந்த விதத்திலும் அந்த துறையை நமது முதலமைச்சர் கைவிட்டுவிட மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories