இந்தியா

2 மாதங்களாக காத்திருக்கும் 2 லட்சம் மருத்துவர்கள் : தாமதமாகும் முதுநிலை நீட் முடிவுகள்!

தேர்வு முடிவுகள் தாமதமாக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2 மாதங்களாக காத்திருக்கும் 2 லட்சம் மருத்துவர்கள் : தாமதமாகும் முதுநிலை நீட் முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அளவில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பல, முறைகேடு நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளன.

மாறுபட்ட கல்வி முறையில் பயில்பவர்களுக்கு, ஒரே தேர்வுமுறை என்ற வஞ்சிப்பு ஒரு புறம், ஒரே தேர்வுமுறையில் அரங்கேறும் முறைகேடுகள் மறுபுறம் என்பது கடந்து, தற்போது தேர்வு முடிவுகளும் தாமதமாக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதுநிலை நீட் தேர்வு எழுதி காத்திருக்கும் 2 லட்சத்திற்கும் மேலான இளநிலை மருத்துவர்களும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளனர்.

இது போன்ற கட்டமைப்பில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு, சிறப்பாக செயல்படும் மாநிலக் கல்வி முறையை சிதைக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை முன்மொழிந்து, சிறப்பான கல்வியையும் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

2 மாதங்களாக காத்திருக்கும் 2 லட்சம் மருத்துவர்கள் : தாமதமாகும் முதுநிலை நீட் முடிவுகள்!

அதே வேளையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற நிலையிலும், அக்கல்லூரிகளில் இணையும் மாணவர்களை தேர்ந்தெடுக்கிற உரிமை, மாநில அரசிற்கு வழங்கப்படாமல் இருக்கிறது.

இதனால், சமூகநீதி கொள்கையை முதன்மை கொள்கையாக பின்பற்றும் தமிழ்நாடு அரசினாலும், முழுமையான இடஒதுக்கீட்டை வழங்க இயலாமல் இருக்கிறது. இடஒதுக்கீட்டை புறக்கணிக்க நினைக்கிற ஒன்றிய அரசு பெற்றிருக்கிற உரிமையால், மருத்துவ சேர்க்கையில் பாரபட்சமும் நீடிக்கிறது.

இந்நிலையில், அடித்தட்டு மக்களின் எதிர்காலமாக விளங்கும் கல்வி, பலதரப்பட்டவர்களின் தன்னலத்திற்காக விற்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என தேசிய தேர்வு முகமையையும், அதனை வழிநடத்தும் ஒன்றிய கல்வித்துறையையும், துறை சார்ந்த வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories