தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் நின்று பணியாற்றிய விவரம்!

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாளை (அக்.15), அக். 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது. இதனிடையே பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நடவடிக்கைகளை அமைச்சராக இருந்தபோதில் இருந்து, துணை முதலமைச்சராக ஆன பிறகும் தொடர்ந்து 3 மாதங்கள் விடாமல் கண்காணித்து வந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

அதன் விவரம் பின்வருமாறு :

=> ஆக. 16 :

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

=> செப். 4 :

சென்னை, பெரியமேடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

= > செப். 20 :

சென்னை, இராயப்பேட்டை பகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமான பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

= > செப். 30 :

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார்.

= > அக். 4 :

சென்னை, சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பருவமழை காலத்தை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

= > அக். 5 :

சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி, ஆலோசனைகளை வழங்கினார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

= > அக். 8 :

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் இணைந்து, வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

= > அக். 13 :

* சென்னை, ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது ஏற்கனவே புகார் அளித்திருந்த பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

* சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியாக, சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

* அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியாக, சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயின் நீர் வழிப்பாதைகளைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை அரசு அலுவலர்களுக்கு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, இன்று சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார். அங்கு மணல் திட்டுகள், ஆகாயத்தாமரைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை : பேரிடரை எதிர்கொள்ள முன்கள வீரராய் களத்தில் நின்று பணியாற்றிய துணை முதலமைச்சர் !

= > அக். 14 :

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

banner

Related Stories

Related Stories