தமிழ்நாடு

“ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி !

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 51 -ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று (அக்.06) நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, “சிறப்பாக பணியாற்றிய மற்றும் அதிக தேர்ச்சி விகிதத்தை கொடுத்த ஆசிரியர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதன் மதிப்பெண் பெற்ற 85 அரசு பள்ளி மாணவர்கள், 100 விழுக்காடு தேர்ச்சியளித்த 370 பட்டதாரி ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

“ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி !

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “பெரம்பலூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடத்தை பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 8-வது இடத்தை பெற்றுள்ளது. அதனை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்த ஒரு கோரிக்கையும் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். அது கிடைக்கப்பெற்ற உடன் ஆசிரியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விடும்.

“ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி !

பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்புவது குறித்தும் நீதிமன்றத்தின் கருத்துக்காக காத்திருக்கிறோம். பள்ளிகளின் அருகே போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்களின் பணிச்சுமை குறைக்கும் பொருட்டு EMIS சிஸ்டத்தை செயல்படுத்துவதற்கு தனியாக பணியாளர்களை நியமித்து வருகிறோம். அது முடிவற்ற பிறகு அவர்களின் பணிச் சுமை குறையும்” என்றார்.

இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பரிசு பெற தேர்வான ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories