திராவிட மாடல் ஆட்சியில் அதிக உள்நாட்டு உற்பத்தி; உயர் கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருவதாக B1oomberg இணைய இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற Bloomberg நிறுவன இணைய இதழில் தமிழ்நாட்டின் திராவிட மாடல் வளர்ச்சி குறித்து; 'வணிகம் செய்வதில் தமிழ்நாடு முன்மாதிரி' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. மேனகா தோஷி அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் ரூபாய் 196 கோடி அதாவது ஒரு டிரில்லியன் ரூபாய் (சுமார் 12 பில்லியன் டாலர்) அளவிற்கு நிகர வருவாய் வருவதால், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
மிகப்பெரிய கார்கள் மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் - இந்தியாவின் மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுடன் மட்டுமல்ல, வியட்நாம் மற்றும் மெக்சிகோவுடனும் போட்டியிடுகிறது.
‘ஆப்பிள்' நிறுவன உற்பத்திக்கான வசதிகளுடன் விரைவில் கூகுள் நிறுவன உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த உள்ள இந்தத் தென் மாநிலம் அண்மையில் கார்னிங் மற்றும் ஜபில் ஆகியவற்றிலிருந்து 350 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களைப் பெற்றுள்ளது. ஜனவரியில், வியட்நாமில் உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார வாகனங்களை உருவாக்க 598 மில்லியன் டாலர் அளவிற்கு முதல் கட்டமாக முதலீடு செய்ய உறுதியளித்தது.
டாட்டா மோட்டார் நிறுவனம் 18 லட்சம் டாலர் முதலீட்டில் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை, உலகின் ஆட்டோ மையமாகத் திகழும் இம்மாநிலத்தில் நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இங்கிருந்து 3 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிய 'ஃபோர்டு' நிறுவனம் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில், தொழிற்சாலையைத் தொடங்கி, கார்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய இருப்பது ஓர் இனிப்பான வெற்றியாகும். சீனாவின் ‘பிளஸ்-ஒன்' போக்குதான் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முதலீடுகளைச் செய்யத் தூண்டப்படுவதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு தங்கள் நிறுவன குழுக்களை அனுப்புவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜா (வயது 48) தமது இளம் வயது அதிகாரிகளான தொழிற்துறை செயலாளர், முதலீட்டு நிறுவனத் தலைவர்கள் (40 முதல் 58 வயது வரை உள்ளவர்கள்) சற்று வித்தியாசமாக செயல்படுகிறார்கள்.
சுற்றுச் சூழலில் முக்கிய பங்குதாரர்களை குறிவைக்க உலகளாவிய விநியோக இணைப்புகளை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். முதலீட்டாளர்களை உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கிறார்கள்.
துறைமுகச் செயல்திறனை அவர்கள் மேம்படுத்துகின்றனர். தமிழ்நாடு தொழில் தொடங்குவதற்காக வெளி நாட்டின் முதலீட்டாளர்களை தற்போதுள்ள முதலீட்டாளர் களுடன் இணைக்கும் முயற்சியில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 'ஃபர்ஸ்ட் சோலார்’ நிறுவன தலைமை அதிகாரி, தமிழ்நாட்டில் தனது நிறுவன அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு, சிறந்த ‘பிராண்டு அம்பாசிடர்' போலவே பணியாற்றினார்.
குஜராத் மாநிலம் இரண்டு பெரிய 'செமி கண்டக்டர்’ திட்டங்களை பெற்ற உடன், தமிழ்நாடும் 'செமி கண்டக்டர்’ திட்டத்தில் முதலீடுகள் வெறுவதில் தீவிரமாக உள்ளது.
‘ஆய்வும், வளர்ச்சியும் எங்களது பலம். இந்தியாவில் திறமை வாய்ந்தவர்களில் அதிகம் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். அதிகப்படியான ‘பேட்டண்டு' (காப்பீடு) கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே நாங்கள் அறிவுப்பொருளாதாரத்தில் செயல்படுகிறோம்’ ” என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டார்.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆலோசகர் ரிச்சர்ட் ரோசோவ் குறிப்பிடுகையில், 'இந்தியாவில் முதலீடு செய்வது என்பது கார் வாங்குவது போன்றது. அவரது கூற்றுப்படி ஒன்றிய அரசின் கொள்கைகள் வெளிப்புறங்- களை குறிக்கின்றன. ஆனால் மாநிலங்கள் உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை நிர்ணயிக்கின்றன' என்றார்.
'மண்டல அளவில் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர்கள் பலமுறை தமிழ்நாட்டைத்தான் கூர்ந்து நோக்குகிறார்கள். மாநிலத்தின் அணுகுமுறையும் மிகமிக முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூகப் பொருளாதார வளர்ச்சியுடனான திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக உள்நாட்டு உற்பத்தி கொண்ட மாநிலமாகவும், உயர்கல்வியிலும் முன்னணியில் உள்ள மாநிலமாகவும், நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகமாக பணியாற்றும் (46 சதவிகி-தம்) பெண்கள் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
வர்த்தகத்தைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் அதிக அளவிலான சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன. வேலை வாய்ப்பும் உள்ளன. ஏற்றுமதிக்கான நிலையும் சிறப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் படித்த தொழிலாளர்கள், அதிகமான விநியோகத்திறன், கொள்கை ஊக்குவிப்பு இவைகளால்,மகாராஷ்டிரா, ஆந்திரா, ஓடிசா மாநிலங் கள் தமிழ்நாட்டை பின்பற்றுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.