தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம் : சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட 36 படகுகள்!

சென்னை மாநகராட்சி சார்பில் 36 படகுகள் புதிதாக வாங்கப்பட்டு தயார் நிலையில் வைப்பு.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம் : சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட 36 படகுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டிற்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழ்நாட்டின் வட பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெறுகின்றன.

இந்த நிலையில் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம் : சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட 36 படகுகள்!

அதில் வெள்ளம் ஏற்பட்டவுடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக செயல்பட்டு, ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ப தேவையான நீர் இறைக்கும் இயந்திரம் மர அறுப்பான்கள், ஜே.சி.பி, படகுகள் போன்ற கருவிகள் தாழ்வான பகுதிகள் அருகில் முன்கூட்டியே நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது, அதில் மண்டலம் 3-க்கு ஒரு படகும், மண்டலம் 14-க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள படகுகள் மற்ற மண்டலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories