தமிழ்நாடு

50 ஆண்டு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்! : இது மு.க.ஸ்டாலின் மாடல்!

திராவிட மாடல் என்ற ஆட்சிமுறையை முன்வைக்கும் முதலமைச்சரின் சமூகநீதி அணுகுமுறையை ‘மு.க. ஸ்டாலின் மாடல்’ என்று அனைத்துத் தரப்பு மக்களும் போற்றுகிறார்கள்.

50 ஆண்டு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்! :  இது மு.க.ஸ்டாலின் மாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சமூக நீதி அரசியலை அரசுத் திட்டங்களாக உருமாற்றி வரும் திராவிட மாடல் அரசு 50 ஆண்டு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மைல்கல்லான ஒரு நகர்வை திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி. செழியன் அவர்களை அமைச்சராக்கியது முக்கியமான செய்தி தான். ஆனால் அவருக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்கி, பொறுப்பு வழங்கியிருப்பது மிகவும் கவனிக்க வேண்டிய - போற்றுதலுக்குரிய நகர்வு.

இந்தியாவின் பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி, அதுவும் உயர்கல்வி என்பதே இன்னும் கூட கனவாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படியில்லை. இங்கு அனைத்துத் தரப்பு மக்களும் அவரவர் விரும்பிய கல்வியை பயில முடியும். அதற்கு திராவிட இயக்கங்கள் பாதை அமைத்துக் கொடுத்துள்ளன.

50 ஆண்டு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்! :  இது மு.க.ஸ்டாலின் மாடல்!

இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இதனை இன்னும் மேலும் மேலும் உயர்த்திட திராவிட மாடல் அரசின் மூலம் திட்டங்களை வழங்கி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், “பள்ளிக்கல்விக்கு காமராஜர் காலம் போல, உயர்கல்விக்கு முத்தமிழறிஞர் கலைஞர் காலம் போல, ஆராய்ச்சிக் கல்விக்கு என்னுடைய ஆட்சி காலம் முன் மாதிரியாக இருக்கும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தான் திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை உயர்கல்விதுறைக்கு அமைச்சராக்கி இருக்கிறது. இதன் மூலம் “சமூகத்தின் எல்லா தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் திராவிட மாடல்” என்பதை மீண்டும் ஒருமுறை தன்னுடைய செயல்களால்

மெய்பித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுவொரு வரலாற்றுத் தருணம்! ஆம் நாமெல்லாம் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி பெற முடியுமா என நினைக்கும் நிலைக்கு எளிய பின்புலம் கொண்ட எந்தவொரு மாணவனும் தள்ளப்படமாட்டார்.

திராவிட மாடல் என்ற ஆட்சிமுறையை முன்வைக்கும் முதலமைச்சரின் இது போன்ற அணுகுமுறையை ‘மு.க. ஸ்டாலின் மாடல்’ என்று அனைத்துத் தரப்பு மக்களும் போற்றுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories