தமிழ்நாடு

“துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக விளங்கி வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் பொறுப்பு வகிப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் வளர்ச்சி நோக்கியும், அது சார்ந்த மாற்றம் நோக்கியும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மாற்றத்தை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன் படி, இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதியேற்க இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக விளங்கி வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் பொறுப்பு வகிப்பார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இது குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X சமூக வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.

அன்பும், நன்றியும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories