தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மேலும் 2 மினி டைடல் பூங்கா : முதற்கட்ட பணி தொடக்கம்!

தகவல் தொழில்நுட்பத்துறையில் புது உச்சம் படைக்கும் தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் மேலும் 2 மினி டைடல் பூங்கா : முதற்கட்ட பணி தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பின், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் பலர் உருவாகி, தகவல் தொழில்நுட்பத்தில் புதிய வரலாற்றைப் படைக்க, தமிழ்நாடு அரசால் பல உதவிகள் செய்து தரப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவையும், கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

அதன் படி, வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

banner

Related Stories

Related Stories