தமிழ்நாடு

ரூ.9,000 கோடி முதலீடு... 5,000பேருக்கு வேலைவாய்ப்பு... Tata தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் !

ரூ.9,000 கோடி முதலீடு... 5,000பேருக்கு வேலைவாய்ப்பு... Tata தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.09.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப, ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரூ.9,000 கோடி முதலீடு... 5,000பேருக்கு வேலைவாய்ப்பு... Tata தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் !

அந்த வகையில், எஃகு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் உலகளவில் சிறப்புடன் செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அதிநவீன மோட்டார் வாகன உற்பத்தி ஆலையை இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்தில், 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இவ்வாண்டு மார்ச் மாதம் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ், டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ் தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.9,000 கோடி முதலீடு... 5,000பேருக்கு வேலைவாய்ப்பு... Tata தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் !

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம். முனிரத்தினம், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பி.கார்த்திகேயன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் IAS, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய். IAS சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ் IAS, வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு IAS இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா IAS, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் P.B.பாலாஜி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சைலேஷ் சந்திரா, JLR நிறுவனத்தின் இயக்குநர் ஃப்ராங்க் லட்விக் (Thiru Frank Ludwig) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories