தமிழ்நாடு

”75 ஆண்டுகளாக வீறுகொண்டு வெற்றிநடை போடும் இயக்கம் தி.மு.க” : கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து!

75 ஆண்டுகளாக வீறுகொண்டு வெற்றிநடை போடும் இயக்கம் தி.மு.க என விசிக தலைவர் திருமாவளவன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”75 ஆண்டுகளாக வீறுகொண்டு வெற்றிநடை போடும்  இயக்கம் தி.மு.க” : கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க முப்பெரும் விழாவுடன் சேர்த்து பவள விழா கடந்த வாரம் செப்.17 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று கழக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளன், “பவளவிழா காணும் தி.மு.க, இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும், மகத்தான பேரியக்கம். வெறும் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கிய சராசரி கட்சியாக, தி.மு.க இயங்காததால் தான், 75 ஆண்டுகளாக வீறுகொண்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.

தந்தை பெரியார் வழி தவறாமல், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் பிடிப்பு மாறாது, திராவிட கொள்கைகளைப் பின்பற்றி, திராவிட மாடல் இயக்கமாக, சமூக நீதி இயக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது தி.மு.க" என தெரித்துள்ளார்.

பின்னர் பேசிய CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ”பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று டெல்லியில் துணிச்சலுடன் சொன்னவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கைகளை ஈட்டிமுனையாக எதிர்த்து வருகிறது தி.மு.க.

கட்சி தொடங்கி 15 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த இயக்கம் தி.மு.க. விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என பல போராட்டங்களை நடத்தி அண்ணா, கலைஞர் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். இப்படி போராடி தியாகங்கள் செய்துதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. சுயமரியாதை, மாநில உரிமைகள் முரசு கொட்டும் இயக்கம் தி.மு.க.”" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய, CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ”இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் திருப்புமுனைக்கு தி.மு.க இயக்கம் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. தி.மு.கவின் பங்களிப்பை யாரும் மறக்கமுடியாது. எதிரும் புதிரும் ஆக இருக்கும் இரண்டு கட்சிகளையும் ஒரே மேடையில், ஒரே அணியில் கொண்டுவந்தது தி.மு.கதான். அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி தி.மு.க என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories