தமிழ்நாடு

“ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க பயிற்சி” - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

“ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க பயிற்சி” - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தேசிய உணவக சங்கம் சார்பில் இந்திய உணவகங்களின் சம்மேளனம் 2024 என்ற பெயரில் இரண்டு நாள் மாநாட்டுக்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் சுமார் 20 நகரங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டுறவுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் பேசியதாவது, “இதில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தாலும் சென்னையில் இந்த மாநாடு நிகழ்வது பெருமையாக உள்ளது. மருத்துவர்கள் சிறுவர்கள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தங்கு தடை இன்று ஏற்பாடு செய்ய சென்னை சேர்ந்த உணவு உரிமையாளர்கள் உறுதுணையாக இருந்தனர்.

“ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க பயிற்சி” - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
கோப்பு படம்

உணவுப் பொருட்களை எப்படி பதப்படுத்தி பாதுகாப்பாக வைப்பது எப்படி தரத்துடன் எப்படி விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 37 ஆயிரம் நியாய விலை கடைகள் மூலம் 2.24 கோடி மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வருகிறோம்.

உணவகங்கள் பொழுதுபோக்காக மட்டுமின்றி பணி நிமித்தமாக கூட இப்பொழுது செல்ல வேண்டியது உள்ளது. சத்தான உணவு முக்கியம் அதேபோல் ருசியான உணவுக்கு இந்த உணவகங்கள் தரப்பில் பல்வேறு புதுமையான யுக்திகள் கொடுக்கப்படுகின்றனர். உணவை பொருத்தவரை அதற்கு குறிப்பிட்ட நாட்கள்தான் பயன்படுத்த முடியும் என்று கால அளவு உள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு உள்ள வசதிகள் என்னென்ன அதை எப்படி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து எல்லாம் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளது. அனைத்து காலகட்டங்களிலும் அனைத்து விதமான உணவுகளும் கிடைக்குமாறு செய்ய பதப்படுத்துவது முக்கியமாக இருக்கிறது, அதை செய்வது எப்படி என்று பயிற்சியையும் இவர்கள் வழங்குகிறார்கள். நியாய விலைக் கடைகளிலும் பாதுகாப்பாக தரமான பொருட்களை கொடுக்க துறை சார்பில் பயிற்சி வழங்கிதான் வருகிறோம்.

முதலமைச்சர் ஆணைப்படி உணவுத்துறை அமைச்சருடன் இணைந்து ஒன்றிய அரசிடம் தெரிவித்திருந்தோம். அந்த வகையில் கோதுமை 34,000 மெட்ரிக் டன் தேவையாக இருக்கும் நிலையில், 8,600 டன் கோதுமைதான் கிடைத்து வந்தது. தற்போது அதை 17 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் அளவு உயர்த்தி இருப்பது கோதுமை தற்பொழுது மக்கள் அதிகம் உட்கொள்ளவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories