தமிழ்நாடு

”செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை” : என்.ஆர்.இளங்கோ பேட்டி!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவிதுள்ளார்.

”செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை” : என்.ஆர்.இளங்கோ பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி ஆட்சி செய்து வரும் மாநிலங்களை அடக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துயை கொண்டு எதிர்க்கட்சி தலைகளை கைது செய்து மிரட்டி வருகிறது.

அப்படிதான் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால்,ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அமைச்சாரக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கக்கு எதிராகவும், ஜாமின் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஒஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்த நபரையும் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்பதை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளது. இந்த ஜாமினை தொடர்ந்து 471 நாட்களுக் பிறகு செதில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து டெல்லியில் பேட்டி கொடுத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ " செந்தில் பாலாஜியின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வழக்குகளில் ஜாமினே ஜாமினே கொடுக்கக்கூடாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை அடக்குமுறையாக பார்த்து உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி இருக்கிறது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்த நபரையும் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்பதை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளது.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. இன்று மாலை அல்லது நாளை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories