தமிழ்நாடு

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், பாலின சமத்துவமிக்க கல்வி வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, முன்னோடி மாணவர்களாக பங்காற்றி வருகின்றனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், அழுத்தமின்மையுமே.

அவ்வாறான அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அதன்படி, “செப்.28 முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.

பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

banner

Related Stories

Related Stories