தஞ்சாவூர் மாவட்டதில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்ச உதயநிதி ஸ்டாலினுக் நேற்று இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கும்பகோணத்தில் மொழிப்போர் தியாகி இரத்தினம் அவர்களின் திருவுருவச்சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தலைவர்களுக்கு மட்டும் சிலை வைக்காமல், அடிமட்டத் தொண்டனுக்கும், கிளைச் செயலாளருக்கும் சிலை வைத்து திறந்து வைக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான்.
இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்ற அண்ணன் இரத்தினம் அவர்கள், மாங்குடியில் படிப்பகத்தை உருவாக்கி ஏராளமான இளைஞர்களிடம் கழக கொள்கைகளைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
அண்ணன் இரத்தினம் அவர்களின் திருவுருவச்சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறோம். அவரது பணியை என்றும் போற்றுவோம்.
கலைஞர் வழியில் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இன்று இந்தியா, இந்தியாவாக இருக்க நம்முடைய தலைவர் முன்நின்று உருவாக்கிய இந்தியா கூட்டணியே காரணம்.
புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், இலவச பேருந்து பயணம் போன்ற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது" என தெரிவித்துள்ளார்.