சென்னை பல்கலைக்கழக 166 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
சென்னை பல்கலைக்கழகத்தின் 166 ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் இந்திய அணுசக்தி துறை தலைவருமான அணில் கக்கோட்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
துணைவேந்தரின் கையொப்பத்திற்கு பதிலாக உயர் கல்வித் துறை செயலாளரின் கையொப்பம் பதிவிடப்பட்டு மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக 166வது பட்டமளிப்பு விழாவில் நேரடியாக 1031 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார்.
இதில் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் 89 ஆயிரத்து 53 பேருக்கும், தொலைதூர கல்வி நிலையத்தில் பயின்ற 16,263 பேருக்கும், பல்கலைக்கழக துறைசார்ந்த 1,404 பேருக்கும், முனைவர் பட்டம் 70 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.