தமிழ்நாடு

சிறந்த 100 கவிஞர்களுக்கு ‘கலைஞர் விருது’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறந்த 100 கவிஞர் பெருமக்களுக்கு ‘கலைஞர் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சிறந்த 100 கவிஞர்களுக்கு ‘கலைஞர் விருது’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கமும், கவிதை உறவு இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்தும் 'கலைஞர் விருது விழா' நேற்று (செப்.23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 கவிஞர் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலைஞர் விருது விழாவுக்கு முதலமைச்சரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர் வி ஜி சந்தோஷம், டாக்டர் ஜெயராஜமூர்த்தி, கவிச்சுடர் கவிதை பித்தன், கலைமாமணி ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கவிஞர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் வாழ்த்து செய்தி வருமாறு :

தமிழ் இலக்கிய உலகின் முன்னத்தி ஏர்களில் ஒருவராகத் திகழும் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள், கடந்த 53 ஆண்டுகளாக நடத்தி வரும் “கவிதை உறவு" என்ற திங்களிதழ் அமைப்பும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைச் சிறப்புற நடத்துவதறிந்து பெரிதும் அகம் மகிழ்வடைகிறேன். இவ்விழாவில் 100 கவிஞர்களுக்கு "கலைஞர் விருது" வழங்கப்படுவதை, தலைவர் கலைஞரின் தமிழுக்குச் செய்கின்ற சிறப்பாகவே கருதுகிறேன்.

சிறந்த 100 கவிஞர்களுக்கு ‘கலைஞர் விருது’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் வங்கித் துறையில் பணியாற்றியவர். தமிழ்க் கவிதையில் ஆர்வம் கொண்டு, "கவிதை உறவு" எனும் இதழைச் சிறப்பாக நடத்தி வருபவர். 130-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து, தமிழ் வளர்ச்சித்துறையின் விருதுகள் பல பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற பெருமைக்குரியவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அமைத்த 12 குழுக்களில் மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையிலான, "நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர் குழுவின் உறுப்பினராக இடம்பெற்று, சேலத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

வெற்றிக்கு உறுதுணை புரிந்தவர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள். அவர், புகழ்வாய்ந்த வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவோடு, டாக்டர் வி.ஜி.பி சந்தோஷம் அவர்களுடன் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது வெகு சிறப்பு. இந்த விழா வெற்றிகரமாக அமைய உளமார வாழ்த்துகிறேன், கலைமாமணி ஏர்வாடி திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும். டாக்டர் திரு. வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு! ஓங்குக கலைஞர் புகழ்!”

banner

Related Stories

Related Stories