சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியலறிஞர்கள் விருதுகள் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளாண்மையியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியல், கணிதவியல், மருத்துவவியல், இயற்பியல், சமூகவியல், கால்நடையியல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “இந்த நிகழ்ச்சி எப்போதோ நடத்து இருக்க வேண்டிய நிகழ்ச்சி அது தாமதம் ஆகிவிட்டது. சில காலம் செயலாளர் இல்லாமல் இந்த அறிவியல் மன்றம் செயல்பட்டது. தற்போது இதற்கு செயலாளர் நியமனம் செய்து உள்ளோம். இப்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள ஆண்டுகளும் அறிவியலறிஞர்கள் விருதுகள் விரைவில் வழங்கப்படும்.
இந்த விருது சாதராண நிகழ்வு அல்ல. அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க நடைபெறும் நிகழ்வு. இது அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து மாணவர்களும் பொருந்தும்.
அறிவியல் ரீதியாக அனைத்தையும் அணுக வேண்டும். உயர்கல்வியில் எண்ணிக்கை மட்டும் உயர்த்துவது நோக்கம் அல்ல திறமையை வளர்க்க வேண்டும். இந்தியாவிலலே அதிக அளவு தமிழகத்ததில் தன் 52 % உயர்கல்வி படிக்கிறார்கள். அது தான் கல்வி வளர்ச்சி. அதற்காக உருவாக்கப்பட்டது தான் அறிவியல் தொழில்நுட்பம்.
படிக்கும் போதே வளர வேண்டும். ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும். முதல்வர் அதை பாராட்டுகிறார். 10 இஸ்ரோ அறிவியல் அறிஞர்களுக்கு ரூ. 25 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். அறிவியல் ரீதியாக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். என்னை போல் வயதானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்போது எல்லாம் தளர்ச்சி தான் ஆனால் இப்போது வளர்ச்சி தான். அப்போது இரண்டு பல்கலைக்கழகம் மட்டும் தான் இருந்தது.
இப்போது விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் 15 அரசு கலை கல்லூரி உள்ளது. மூன்று ஆண்டுகளில் 21 அரசு கல்லூரிகளை திறந்து உள்ளது. படிக்கும் போதே தொழில் ரீதியாக வளர வேண்டு்ம். முதலமைச்சர் கூறுவார். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என கூறுவார்.
ஆரம்ப நிலையில் இதை வளர்க்க வேண்டும். புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போல உயர்வுக்கு படி என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார் முதலமைச்சர். கல்வி தரத்தின் எண்ணிக்கையை உயர்த்த தான் பல பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மனபான்மையை வளர்க்க வேண்டும்.
ஆராய்ச்சி துறையில் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்றுத்துறை சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
63 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வக பூங்கா உருவாக உள்ளது. UG படிப்பில் இருந்து PG படிப்பில் போய் சேரும் போது மாதம் ஆறு ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பத்தாம் மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் இடைநிறுத்தல் கூடாது.
ஐடிஐ படிக்கலாம் பாலிடெக்னிக் படிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் skill developed உள்ளது” என்றார்.