தமிழ்நாடு

“அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

12 மாதங்களில் 258 உயிரிழந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். உறுப்பு தானம் செய்த 258 பேரின் குடும்பத்தினரை மருத்துவத்துறை அழைத்து சிறப்பு செய்ய விழா நடைபெற்றது.

“அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை!” :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் உறுப்பு தான கொடையாளர்களின் குடும்பத்திற்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டி சிறப்பு செய்தார்.

கடந்த 12 மாதங்களில் 258 உயிரிழந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். உறுப்பு தானம் செய்த 258 பேரின் குடும்பத்தினரை மருத்துவத்துறை அழைத்து சிறப்பு செய்ய விழா நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ 48 அரசு மருத்துவமனையில் மூளை சாவு கமிட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி, ராஜிவ்காந்தியை தொடர்ந்து நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 25 லட்சம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

“அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை!” :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

விடியல் எனும் தானியங்கி பதிவு செயலி தொடங்கப்பட்டுள்ளது. தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம், கொடையாக பெறப்பட்ட உறுப்புகளை சரியான முறையில் சிகிச்சை அளித்து மற்றோர் உயிர் காப்பாற்றப்படுகிறது. மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனையிலும் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

தற்போது 272 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது. 14,300 பேர் இணையத்தில் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மியாட் மருத்துவமனையில் தனது உறுப்பை தானமாக தர பதிவு செய்துள்ளார்.

1,471 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பலனடைந்துள்ளனர். 7,106 பேர் சிறுநீரகம் வேண்டி காத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது. 2012ல் 66 பேர் இறந்தனர். நடப்பாண்டில் டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 5ஆக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பாம்பு கடிக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருந்ததா என்பதை அவரே ஆய்வு செய்யட்டும். மருந்து தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் குறை சொல்லக்கூடாது. அனைத்து மருத்துவமனைகளிலும் எதிர்க்கட்சித் தலைவரே சென்று ஆய்வு மேற்கொள்ளட்டும்” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories