தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய தூதர் சிலாய் பாராட்டு! : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதாகவும் , சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், அதிகமாக தமிழர்கள் இருப்பதாகவும் ஆஸ்திரேலியா தூதர் சிலாம் சாகி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய தூதர் சிலாய் பாராட்டு! : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி, துணை தூதர் ஜெனரல் டேவிட் எக்லெஸ்டன், திட்ட மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ளபட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா ஆஸ்திரேலியா சுகாதார சேவை பற்றி பல்வேறு கருத்துகள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதாகவும் , சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், அதிகமாக தமிழர்கள் இருப்பதாகவும் ஆஸ்திரேலியா தூதர் சிலாம் சாகி தெரிவித்ததாக கூறினார்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய தூதர் சிலாய் பாராட்டு! : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!

அதேபோல், ஆஸ்திரேலியாவில் முதியோர்களுக்கான மருத்துவ சேவைகள், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பற்றிய பல்வேறு செய்திகள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, சிறுநீரக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்து சொல்லப்பட்டதாகவும், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் அதற்கான , விரைவில் அவரும் அந்த திட்டத்தில் பங்கேற்று நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மருத்துவ சேவைகள் குறித்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்ததோடு, அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

banner

Related Stories

Related Stories