தமிழ்நாடு

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் : போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது சுட்டுக்கொலை !

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் : போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது சுட்டுக்கொலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி ஆள் கடத்தல் என 59 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்கு விசாரணை ஒன்றிற்காக அதிகாலை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் காக்கா தோப்பு பாலாஜியை தேடி வந்த நிலையில் அவர் வியாசர்பாடி பி.எஸ்.என்.எல் குடியிருப்பு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அவரை இன்று காலை பிடிக்க முறன்றுள்ளனர். அப்போது ரவுடி பாலாஜி போலிசாரை தாக்கி தப்பி ஓடும் போது போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் : போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது சுட்டுக்கொலை !

மேலும், உயிரிழந்த காக்கா தோப்பு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் உள்ளதாகவும் 12 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என போலீஸா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories