தமிழ்நாடு

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் : சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!

மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி முன் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம், ஆதாரங்களை அளித்தார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் : சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 2016 - 2021 ம் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்தார் என புகார்கள் எழுந்தது.

குறிப்பாக தஞ்சை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விதிகளை மீறி, ரூ.692 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் : சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!

இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என அறப்போர் இயக்கத்தின் வாதத்தை ஏற்று இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி முன் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம், ஆதாரங்களை அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மகாலெட்சுமி, எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 11ஆம் நாள் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories