தமிழ்நாடு

TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?

TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் உண்மையை பொய் தீ போல் பரவுகிறது. அதிலும் குறிப்பாக திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வதந்தியை இன்னும் வேகமாக பரப்பி வருகிறது. எனினும் இதுபோன்ற போலி விஷயங்களை முறியடித்து, மக்களாட்சியில் முன்னிலையில் இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

இந்த சூழலில் தற்போது தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் கல்வெட்டுகளை அழித்து விட்டு, இந்தி கல்வெட்டுகள் உள்ளதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, தஞ்சை கோயிலில் உள்ள பகுதி ஒன்றில், தமிழ் கல்வெட்டுகளும், அதன் அருகே மற்றொரு பகுதியில் வேறொரு மொழியில் கல்வெட்டுகளும் உள்ளது.

TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?

இதனை அந்த வீடியோவில் குறிப்பிட்டு, "தஞ்சை கோயிலில் மொழி அழிப்பு வேலை செய்து வரும் கும்பல்... உடனே நடவடிக்கை எடு" என்றும் குறிப்பிட்டுள்ளது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது அது வதந்தி என்று தெரியவந்துள்ளது.

TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?

அதாவது இந்த வீடியோவானது 2019-ல் இருந்தே இணையத்தில் வலம் வருகிறது. அப்போதே இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை விளக்கம் கொடுத்தது. அதன்படி அந்த எழுத்துகள் இந்தி அல்ல என்றும், மராட்டியர் ஆட்சி காலத்தில் கோயிலில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவக் கல்வெட்டுகள் என்றும் தெரிவித்தது.

மேலும் தேவநாகரி எழுத்துகளை இந்தி என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்திருந்தது. இதனை தற்போது தமிழ்நாட்டு அரசின் அதிகாரபூர்வ சரிபார்ப்பு இணையமான TN Fact Check வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் அழிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் வீடியோ வதந்தி என்பதே ஆகும்.

banner

Related Stories

Related Stories