தமிழ்நாடு

“கோயில் சொத்துகளை கொள்ளை அடிப்பதே பாஜகவினரின் எண்ணம்” - நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி!

தமிழக அரசு மீனவர்கள் குறித்து பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

“கோயில் சொத்துகளை கொள்ளை அடிப்பதே பாஜகவினரின் எண்ணம்” - நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் அன்று பகுத்தறிவு கொள்கைகள், ஆணாதிக்க சிந்தனை போக்குதல், பெண்ணடிமை தனத்தினை ஒழித்திடவும், சமூகத்தில் வளரும் சாதிய வேறுபாடுகளை ஒழிக்கும் மகத்தான கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேம்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்கும் வகையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம்.

“கோயில் சொத்துகளை கொள்ளை அடிப்பதே பாஜகவினரின் எண்ணம்” - நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி!

இந்தியாவில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் சனாதான பாஜக என்கிற மதவெறி பிடித்த அமைப்பை இந்த நாட்டில் வர்ணாஷ்ரம தர்மத்தையும் பெண் அடிமைத்தனத்தையும் தூக்கிப் பிடிக்கும் ஆட்சியாக இருப்பது எதற்கு? சனாதான சக்திகளை வீழ்த்துவதற்கு ஒன்றிணைந்து போராடுவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு தினம் தோறும் பல கொடுமைகள் நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடைய பேச்சு அவருடையது மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேச்சு. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் சொந்த கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோயில்கள் மற்றும் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. பல தனியார் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் கூட இப்போது பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்க பாதுகாப்புக்கு வருகிறது. இப்படி பாதுகாப்பாக இருக்கும் கோயில்களை பெற்று யாரிடம் கொடுக்கப் போகிறார்கள். கோயில் சொத்துகளை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட எண்ணத்தினை மனதில் கொண்டு மட்டுமே இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“கோயில் சொத்துகளை கொள்ளை அடிப்பதே பாஜகவினரின் எண்ணம்” - நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி!

தொடர்ந்து நான்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மீனவர்கள் கடலில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். தற்போது மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு அசிங்கப்படுதப்படும் அட்டூழியத்தில் சிங்கள ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் தமிழக மக்களும் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தாலும் ஒரு சிறிய துரும்பை கூட ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமாப்படுத்தியதற்கு கண்டித்து வருகின்ற 20 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற உள்ளது” என்றார்.

banner

Related Stories

Related Stories