தமிழ்நாடு

”சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

”சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்று சீத்தாராம் யெச்சூரி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அச்சமன்ற தலைவர் சீத்தாராம் யெச்சூரி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

மாணவர் பருவத்திலேயே அச்சமற்ற தலைவராக அவசர நிலை சட்டத்துக்கு எதிராக நின்றவர். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல், முற்போக்கு அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது சமூகவலைதளப் பதிவில்,”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.அவரது மறைவு முற்போக்கு அரசியலுக்கும் இடதுசாரி சிந்தனைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் அவர் நெருக்கமாக பணியாற்றினார். அவரை இழந்துவாடும் சிபிஐ(எம்) தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories