தமிழ்நாடு

#FactCheck : அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறை - அம்பலமான தினமலரின் அரைகுறை செய்தி!

அரசு மருத்துவமனையில் செவிலியர் உடை மாற்றும் அறை குறித்து தினமலர் அவதூறு பரப்பி செய்து வெளியிட்டுள்ளது போலி என தெரியவந்துள்ளது.

#FactCheck : அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறை - அம்பலமான தினமலரின் அரைகுறை செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு குறித்து பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இவை மட்டுமல்லாது, பாஜக ஆதரவு ஊடகமான 'தினமலர்' செய்தியும் அவதூறு பரப்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளது. இப்படி அவதூறு பரப்பி பின்னர் மொக்கை வாங்குவதே தினமலருக்கு வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் தற்போதும் இதே போல் அவதூறு ஒன்றை 'தினமலர்' பரப்பியுள்ளது. அதாவது “தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தகர சீட் போட்டு, சாதரணமாக ஸ்கிரீன் கொண்டு மூடும் நிலையில், பெண் செவிலியர்கள் உடை மாற்றும் அறை பரிதாபமாக உள்ளது” என்று குறிப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

#FactCheck : அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறை - அம்பலமான தினமலரின் அரைகுறை செய்தி!

கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிட்டுள்ள இந்த செய்தி தற்போது வழக்கம்போல் போலி செய்தி என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் சமூக ஊடகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

"இது முற்றிலும் பொய்யான தகவல்.

“தினமலர் வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பது அங்குள்ள கூட்ட அரங்கத்துக்கு நொறுக்குத்தீனி (Snacks) வைத்து கொடுக்கும் இடம். அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் செவிலியர்களுக்கான உடை மாற்றும் அறை பயன்பாட்டில் உள்ளது.

ஏற்கனவே செவிலியர்களுக்கெனக் கழிவறையுடன் இருந்த உடை மாற்றும் அறையின் பழைய கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அப்பணி முடிவடைந்த பிறகு ஒரே இடத்தில் செவிலியர்களுக்கான உடை மாற்றும் அறைகள் செயல்படும்” என்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் விளக்கமளித்துள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கம்போல் போலி செய்தி வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயற்சித்த 'தினமலர்' செய்தி நிறுவனத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories