தமிழ்நாடு

”மத - சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்” : திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம்!

மத - சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

”மத - சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்” : திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத - சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

”கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்" என்ற தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சி காலம் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.

அண்மைகாலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடலோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் 'தமிழ்நாடு மாணவர் மன்றம் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories