தமிழ்நாடு

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை 1.3.2024 அன்று பிறப்பித்த அரசாணையின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை அமைச்சர், குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் உட்பட 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

இக்குழு 13.6.2024 அன்று கூடி மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 836 பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப்பகுதி மனை இடங்களில் 516 பட்டாக்கள், நகர நிலவரித்திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில் 9,563 பட்டாக்கள், ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வரன்முறை செய்து வழங்கப்பட்ட 484 மனைப்பட்டாக்கள், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர், மதுரவாயல் மற்றும் மாதவரம் வட்டங்களில் 19,114 பட்டாக்கள், ரயத்துவாரி நஞ்சை/புஞ்சை என வகைபாடு மாற்றம் செய்யப்பட்ட 3,253 பட்டாக்கள், என மொத்தம் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (3.9.2024) திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2,099 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியபோது, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என 100 சதவீத வெற்றியை நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் நம்முடைய கழகத்திற்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்னை மக்கள் எப்படி வாக்களித்துள்ளார்கள் என்று ஓர் ஆய்வு செய்யப்பட்டது அந்த ஆய்வில் அடித்தட்டு மக்கள், நடுத்தரவர்க்க மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் கழகத்திற்கு மிகப்பெரிய அளவில் வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தெரியவந்தது. கலைஞர் அவர்களுடைய தலைமையிலான கழக அரசாக இருந்தாலும் நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்களுடைய அரசாக இருந்தாலும் எளிய அடித்தட்டு மக்களுடைய நடுத்தர மக்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தருகின்ற அரசாகவே நம்முடைய கழக அரசு திராவிட மாடல் அரசு செயல்பட்டுள்ளது.

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்திலிருந்து உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் பார்த்துப் பார்த்து நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டுமென நம்முடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை இந்த ஆண்டு அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாகத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. சென்ற ஜூலை மாதம் கூட ரூ.925 கோடி செலவில் கட்டப்பட்ட 5,600 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிகளை உடனடியாக வழங்கிடும் திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இந்த வட சென்னை பகுதியுடைய நலனைக் கருத்தில் கொண்டு ரூ.4,000 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்குக் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், இதுவரை 520 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட மாதம் ஆயிரம் ரூபாய் இந்த விடியல் பயணம் மூலமாகச் சேமிக்கின்றார்கள்.

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

மகளிரின் சுமையைக் குறைக்கின்ற வகையில் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள். இத்திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள். இந்தத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இருக்கிற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தியுள்ளார்கள்.

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் 6.25 இலட்சம் மாணவ மாணவியர் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெறுகிறார்கள். 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1,000 வீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றார்கள்.

இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சியையும் கருதி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டங்களால்தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலே முதலிடம் பெற்றுள்ளது. நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய சாதனைகளில் ஒன்றாக, இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் எல்லாரும் கழக அரசினுடைய திட்டங்களுடைய பயனாளிகள் மட்டுமல்ல நீங்கள் அத்தனை பேரும் இந்தத் திட்டங்களுடைய பங்கேற்பாளர்கள். திராவிட மால் அரசின் சாதனைத் திட்டங்களை எல்லாம் நீங்கள் உங்களுடைய குடும்பத்தினருக்கு உங்களுடைய உறவினருக்கு நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்." என்றார்.

banner

Related Stories

Related Stories