சினிமா

IC814 விமான கடத்தல் தொடர்பான வெப் தொடர்.. Netflix-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய ஒளிபரப்புத்துறை - காரணம்?

IC814 விமான கடத்தல் தொடர்பான வெப் தொடர்.. Netflix-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய ஒளிபரப்புத்துறை - காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மைக்காலமாக உண்மை சம்பவத்தை தழுவிய படங்கள் வெளியாவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு IB71 என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விமானம் கடத்தல் தொடர்பான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம், இந்திய விமான படை அதிகாரிகள் மாறு வேடத்தில் பிற நாட்டுக்குள் நுழைந்து, போரை தடுக்க முயன்றது குறித்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது IC814 என்ற சீரிஸ் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படமும் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இந்த சீரிஸில் இருப்பதாக கூறி ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் Netflix தளத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IC814 விமான கடத்தல் தொடர்பான வெப் தொடர்.. Netflix-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய ஒளிபரப்புத்துறை - காரணம்?

IC 814 என்ற அந்த விமானம் கடந்த 1999-ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் முடக்கினர். மேலும் அதனை ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.இந்த விமானத்தில் பயணித்த 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களும் பயங்கரவாதிகள் பிடியில் இருந்தனர்.

விமானத்தை கடத்திய 5 பேர் கொண்ட பயங்கரவாதிகள், இந்தியாவில் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த முஷ்டாக் அகமது சர்கார், அகமது ஒமர் சையது ஷேக் மற்றும் மௌலானா மசூத் அசார் ஆகிய 3 தீவிரவாதிகளை விடுவிக்கும்படி நிபந்தனைகள் விதித்தனர். சுமார் 7 நாட்கள் வரை விமானத்தை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தொடர்ந்து இந்திய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடிவித்தனர். இதையடுத்தே அந்த பயங்கரவாதிகள் IC 814 விமானத்தை பயணிகளோடு ஒப்படைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தின்போது 17 பயணிகள் காயமடைந்தனர். ரூபின் காட்யால் என்பவர் உயிரிழந்தார்.

IC814 விமான கடத்தல் தொடர்பான வெப் தொடர்.. Netflix-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய ஒளிபரப்புத்துறை - காரணம்?

இந்த நிலையில் இந்த விவகாரத்தின் உண்மை சம்பவத்தை தழுவி IC 814 எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த ஆக.29-ம் தேதி Netflix தளத்தில் வெளியான இந்த தொடரில், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, விஜய் வர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

6 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில், விமானத்தை கடத்தும் பயங்கரவாதிகளுக்கு போலா, சங்கர் போன்ற இந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகி புகார் தெரிவித்தார். இதையடுத்து இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு Netflix-ன் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் விமானத்தை கடத்திய 5 பயங்கரவாதிகளும் தங்களுக்குள் Chief, டாக்டர், பர்கர், போலா, சங்கர் என்று code பெயர்களை பயன்படுத்தி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தொடரில் அந்த பெயர்களை பயன்படுத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories