தமிழ்நாடு

ஃபார்முலா 4 கார் பந்தயம் : முதல் நாள் போட்டி அட்டவணை விவரம் உள்ளே !

ஃபார்முலா 4 கார் பந்தயம் : முதல் நாள் போட்டி அட்டவணை விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இன்று மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கார் பந்தயத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்.

ஃபார்முலா 4 கார் பந்தயம் : முதல் நாள் போட்டி அட்டவணை விவரம் உள்ளே !

இந்திய கார்ப்பந்தய திருவிழா – 2024 : சென்னை ரேஸிங் சர்க்யூட் முதல் நாள் அட்டவணை:

  • தீவுத்திடலில் நடைபெறும் இரவு நேர கார்ப்பந்தயத்திற்கான FIA ஆய்வு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

  • ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் மற்றும் அனுமதி வழங்கப்படும்

  • பந்தய சாலை எப்படி உள்ளது என்பதை ரேஸர்கள் தெரிந்துகொள்ள நண்பகல் 12 மணி முதல் 12.30 வரை 30 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பயிற்சி ரேஸ்கள் மதியம் 1.45 மணியிலிருந்து தொடங்குகிறது.

  • முதலில் இந்திய ரேஸிங் லீக் ரேஸர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். தொடர்ந்து ஃபார்முலா 4 ரேஸர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

  • முதல் நாளின் முக்கியமான நிகழ்வான ஃபார்முலா 4 பந்தயத்திற்கான தகுதிச்சுற்று இரவு 7.40 முதல் 7.50 வரை என 10 நிமிடம் முதல் தகுதிச்சுற்று நடைபெறுகிறது.

  • தொடர்ந்து 7.55 முதல் 8.05 வரை இரண்டாவது தகுதிச்சுற்று நடைபெறுகிறது.

  • இதனை தொடர்ந்து இரவு 8.20 முதல் 8.30 வரை இந்திய ரேஸிங் லீக் ரேஸர்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது

  • இரவு 9 மணிக்கு முதல் நாள் நிகழ்வுகள் முடிவடைகிறது.

banner

Related Stories

Related Stories