தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்" : அமைச்சர் பொன்முடி உறுதி!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்" : அமைச்சர் பொன்முடி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் 2 புதிய மேல்நிலைநீர்தேக்கதொட்டி மற்றும் நாடக மேடையை அமைச்சர் பொன்முடி திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”சமக்ரா சிக்ஷா என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. நிதி வேண்டும் என்றால் PM SHRI திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்துதான் தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்து உருவாக்கியுள்ளார். இரு மொழிக் கல்வியை அடிப்படையாக கொண்டே கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க அரசு எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இரு மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories