தமிழ்நாடு

2025 பொங்கல் பண்டிகை : விலையில்லா வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு ஆணை !

2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2025 பொங்கல் பண்டிகை : விலையில்லா வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு ஆணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை, கரும்பு, பரிசுத்தொகை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த வெளியிடப்பட்ட அரசாணையில், 2025 பொங்கல் பண்டிகைக்கு 1,77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 2025 பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து செயல்படுத்திடவும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு 2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories