அரசியல்

"கொரோனாவால் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம்" - ஒன்றிய அரசின் பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்பொழுது பணிகள் துவங்கும்? எப்பொழுது முடிவடையும்? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

"கொரோனாவால் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம்"  - ஒன்றிய அரசின் பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு 2015 அறிவிப்பானை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியால் மதுரை தோப்பூரில் மருத்துவமனைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

ஆனால், மதுரைக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மதுரையில் மட்டும் இதுவரை எந்த கட்டுமான பணிகளும் தொடங்காத நிலையே நீடிக்கிறது. இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு விரைவில் தொடங்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ஒன்றிய அரசின் வழக்கறிஞர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டு 2026க்குள் பணிகள் துவங்கும். இது குறித்து ஆன்லைனில் விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

"கொரோனாவால் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம்"  - ஒன்றிய அரசின் பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் !

தொடர்ந்து இவ்வளவு ஆண்டுகால ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், கொரோனா காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கொரோனாவை காரணம் காட்டாதீர்கள். ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று ஒன்றிய அரசு சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பினர். மேலும் அரசு தரப்பில் எப்பொழுது இந்த பணிகள் துவங்கும்? எப்பொழுது முடிவடையும்? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வரும் செப்டம்பர் 25 நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories