தமிழ்நாடு

”30 ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்கிய திராவிட மாடல் அரசு” : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

தி.மு.க ஆட்சியில் 30 ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”30 ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்கிய திராவிட மாடல் அரசு” : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டியில் இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்,"உலகில் அனைத்து பகுதிகளிலும் உற்பத்தி பொருட்களை கிடைக்க செய்வது சில்லரை விற்பனையாளர்கள் தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயிர் நாடியாகவும் அதிக வேலை வாய்ப்பு வழங்கும் துறையாகவும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு துறையாக சில்லரை விற்பனையாளர்கள் துறை செயல்படுகிறது.

நுகர்வோருக்கு அனைத்து வகையான பொருட்கள் கிடைக்க அங்காடிகள் உதவுகிறது. பெரிய தொழில்களில் முதலீட்டு செய்யும் பெரிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் முதலீட்டு செய்து உள்ளனர்.

இளைஞர்கள், குறு, சிறு தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு மானியத்துடன் கடனுதவிகளை வழங்கி வருகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி ரூ.1.50 கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழிலுக்கு 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 94 கோடியே 45 லட்சம் மானியத்துடன் 258 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டு 9305 பயனாளிகள் தொழில் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதலிடம் தமிழ்நாடு என்ற முன்னேற்ற பாதையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு அரசு சுய வேலைவாய்ப்புகளை செயல்படுத்தி வருகிறது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 966 கோடி மானியத்துடன் 2615 கோடியே 30 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 30 ஆயிரத்தி 304 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு, 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories