தமிழ்நாடு

நிதி தர மறுப்பு : ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைக்கு அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கண்டனம் !

NEP விதிகளை ஏற்காததற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காத ஒன்றிய கல்வி அமைச்சகத்துக்கு அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி (AISEC) கண்டனம் தெரிவித்துள்ளது.

நிதி தர மறுப்பு : ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைக்கு அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேசிய கல்விக் கொள்கை (NEP) விதிகளை ஏற்காததற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட SSA நிதியை விடுவிக்காத ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டியின் (AISEC) பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் தவணையான ரூ.573 கோடியை, பிரதமர் பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கையின் (NEP) மும்மொழிக் கொள்கை விதிகளை ஏற்காததற்காக, ஒன்றிய கல்வி அமைச்சகம் ஜனநாயக விரோதமாக தமிழகத்திற்கு வழங்காமல் தடுத்து வைத்துள்ளது என்பது நமக்குத் தெரிய வந்துள்ளது.

நிதி தர மறுப்பு : ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைக்கு அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கண்டனம் !

ரைசிங் இந்தியா (PM SHRI) திட்ட ஒப்புதல் வாரியம் 2024-25 ஆம் ஆண்டிற்கு எஸ்எஸ்ஏவின் கீழ் ரூ.3,586 கோடியை தமிழ்நாடு மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஜூன் 2024 இல் 573 கோடி விடுவிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகை மேலே கூறப்பட்டபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சகத்திற்கு மாநில அரசு கடிதம் எழுதியும் ஒன்றிய அரசிடம் இருந்து இன்று வரை எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உட்பட 15,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்.

பேராசிரியர் நஸ்கர் தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்தும், ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத, கல்வி விரோத நடவடிக்கைக்கு எதிராக வலிமையான ஜனநாயக இயக்கத்தை கட்டமைக்க வேண்டியது கட்டாயம் என கல்வியை நேசிக்கும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories