தமிழ்நாடு

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம்! : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

"நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம், அதிநவீன கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகளை இயக்கம் உள்ளிட்டவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டன.

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம்! : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம், அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் ரோபோடிக்ஸ் இயந்திரங்கள் மற்றும் கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகளை இயக்கம் தொடக்கம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 417 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல் ஆகியவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

"நம்ம மெரினா நம்ம பெருமை" விழிப்புணர்வு இயக்கம்!

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கடற்கரையினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 தன்னார்வல குழந்தைகளைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள்!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) போன்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பின்படி, தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், தலா ரூ.6,48,86,888/- வீதம் ரூ.12,97,73,776/- மதிப்பில் 2 எண்ணிக்கையிலான ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் மற்றும் 5 வருட இயக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பிற்கு 9,82,34,076/- என மொத்தம் ரூ.2,280 கோடி மதிப்பில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள லிச்டென்ஸ்டைன் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம்! : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 எண்ணிக்கையிலான மணற்பரப்பை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் 2019 ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த இயந்திரங்களின் தொடர் பயன்பாடு மற்றும் தேய்மானத்தின் காரணமாக அதன் திறன் பயன்பாடு குறைந்துள்ளது. இந்த இயந்திரங்களின் முழு திறனை பெறுவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 2 இயந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

“நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம்! : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

இதனால் கடற்கரை மணற்பரப்பினை சுத்தம் செய்யும் பணிகள் திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை அடிப்படை பணிநியமன ஆணைகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் அடுத்த தலைமுறையினர்களில் 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories