தமிழ்நாடு

முகநூல் தோழி பிரேக் அப் ? : கோபத்தில் டெம்போவை திருடிய கேரள இளைஞர் - தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!

டெம்போவை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், தன்னை தனது காதலியுடன் சேர்த்து வைக்குமாறு கதறியழுத நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் தோழி பிரேக் அப் ? : கோபத்தில் டெம்போவை திருடிய கேரள இளைஞர் - தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் டெம்போ ட்ராவலர் ஒன்றின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் கடந்த 22-ம் தேதி அண்ணா நகர் 6-வது அவென்யூவில் ஒரு பேக்கரியில், சரக்கு இறக்குமதி செய்துகொண்டிருந்தார். சில நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது அவர் ஓட்டிவந்த டெம்போ காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இதுகுறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் அந்த டெம்போவை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, சென்னை விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து டெம்போவை மீட்ட போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரிக்கையில், அவரும் அந்த சிசிடிவி காட்சியில் இருந்தவரும் ஒன்று என்று போலீசார் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பகீர் தகவல் வெளியானது.

முகநூல் தோழி பிரேக் அப் ? : கோபத்தில் டெம்போவை திருடிய கேரள இளைஞர் - தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!

போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் கேரளாவை சேர்ந்த அப்துல் ஜலில் (28) என்றும், பட்டதாரியான இவர், கேரளாவில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் முகநூல் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்துல் ஜலிலுக்கு பழக்கமாகியுள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை சந்திக்க, அப்துல் சென்னைக்கு வந்துள்ளார். அவரை சந்தித்து பேசியபோது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடிவெடுத்த அப்துல், வாடகை காரில் சென்றுள்ளார்.

எனினும் மனது கேட்காமல் மீண்டும் அந்த இளைஞர் வந்து, அந்த பெண்ணிடம் திருமணம் குறித்து பேசும்போது இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு இவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த டெம்போவை பார்த்துள்ளார். பின்னர் அதனை எடுத்துக்கொண்டு கேரளா செல்ல முடிவெடுத்து சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்தை விமான நிலையம் அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதோடு விசாரணையில், தனது மொபைலில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து, இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories