தமிழ்நாடு

”தாயை போல் தமிழ்நாட்டை காத்தவர் கலைஞர்” : மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பாராட்டு!

King Maker ஆக இருந்தவர் கலைஞர் என மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

”தாயை போல் தமிழ்நாட்டை காத்தவர் கலைஞர்” : மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நூல் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம்,"முத்தமிழறிஞர் கலைஞர் இந்திய அரசியலின் மூத்த தலைவர்; அரசியல் வரலாற்றில் கலைஞர் நிகழ்த்திய சாதனையை எதிர்க்காலத்தில் சமன் செய்வது என்பது கடினமானது; கலைஞரின் சாதனையை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் இந்திய அரசியலில் எவரும் இல்லை.

இந்திய அளவில் King Maker ஆக இருந்தவர் தலைவர் கலைஞர். அவரின் மாநில சுயாட்சி கொள்கைகளால்தான் இன்றும் தமிழ்நாடு முதல் ரேங்க்கில் உள்ளது.இந்நூலுக்கு “கலைஞர் எனும் தாய்” என்ற பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது.

தாயைப் போன்று கழகத்தையும், திராவிட இயக்கத்தையும், தமிழ் மொழியையும், நம் மாநிலத்தையும் பாதுகாத்தவர் கலைஞர். இந்த மேடையில் இருக்கும் ஒரு பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார்; ஒரு பஸ் கண்டக்டர் தமிழ்நாடு அமைச்சர். இதுதான் தமிழ்நாட்டின் பெருமை.” என தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், “வயிற்றில் குழந்தையை சுமப்பவர் தாய், நெஞ்சில் கருணையை சுமப்பவர் தாயுமானவர். ஒரு தாயின் பிரசவத்திற்காக திருச்சியில் தோன்றிய கடவுள் தாயுமானவர் ஆக தோன்றினார் என்பது புராணக்கதை. 108 ஆம்புலன்ஸ் மூலம் பல தாய்மார்களின் உயிரை காப்பாற்றிய கலைஞரும் தாய் தானே! ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் கண்மணியாக வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.கலைஞர் பிறந்த நாளை தவிர தமிழ்தாய்க்கு மகிழவான நாள் எதுவும் உண்டா? என கூறினார்.

banner

Related Stories

Related Stories