தமிழ்நாடு

”Made in Tamil Nadu வளர்ச்சியடையும் தொழில்துறை” : பெருமையுடன் சொல்லும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா!

திராவிட மாடல் ஆட்சியில் Made in Tamil Nadu என்று சொல்லும் அளவிற்கு தொழில்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

”Made in Tamil Nadu  வளர்ச்சியடையும் தொழில்துறை” : பெருமையுடன் சொல்லும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”Made in Japan என்று சொல்லுவது போல திராவிட மாடல் ஆட்சியில் Made in Tamil Nadu என்று சொல்லும் அளவிற்கு நமது மாநிலத்தில் தொழில்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,"உலக முதலீட்டார் மாநாடு மற்றும் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் இதுவரை 10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 லட்சம் பேர் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர்.

வெறும் புரிந்துணர்வு மட்டும் அல்லாமல் அதை செயல் வடிவமாக ஆக்குவதற்கு தமிழ்நாடு முதலீடு மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொடக்க விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் காட்டியுள்ளார்.

உலக முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருகின்றன. அந்த அளவிற்கு தொழில் துறையில் பல்வேறு புதிய கொள்கைகளும் வசதிகளும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரானிக் சார்ந்த முன்னணி நிறுவனங்கள், கார் உற்பத்தி நிறுவனம், மருத்துவ சாதனங்கள் உடைய நிறுவனம் , கிரீன் ஹைட்ரஜன் நிறுவனம் என உலகம் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. அதன் இன்னொரு மைல்கல்லாக விவசாயம் சார்ந்த உணவுப் பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாபர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் 400 கோடி ரூபாய் அளவில் தொழிற்சாலை அமைக்க இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் 250 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முதலமைச்சரின் அமெரிக்க தொழில் துறை சுற்றுப்பயணம் மிகப்பெரிய அளவில் உலகத்தை ஈர்க்கும் அளவிற்கு இருக்கும். பல அமெரிக்க முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர் ஒப்பந்தங்களும் இருக்கிறது.

எப்படி Made in Japan என்று சொல்லுவது போல திராவிட மாடல் ஆட்சியில் Made in Tamil Nadu என்று சொல்லும் அளவிற்கு நமது மாநிலத்தில் தொழில்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories