தமிழ்நாடு

ரூ.400 கோடி முதலீடு.. 250 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுடன் டாபர் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

டாபர் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை ரூ. 400 கோடி முதலீட்டில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில் அமைக்க, டாபர் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ரூ.400 கோடி முதலீடு.. 250 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுடன் டாபர் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில், ரூ. 400 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (22.8.2024) தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

ரூ.400 கோடி முதலீடு.. 250 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுடன் டாபர் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் (capital intensive high-tech Industries), பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் (Employment intensive Industries) ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

ரூ.400 கோடி முதலீடு.. 250 பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுடன் டாபர் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

அதன் தொடர்ச்சியாக, வீட்டு பராமரிப்பு (home care), தனிப்பட்ட பராமரிப்பு (personal care) மற்றும் பழச்சாறுப் பொருட்கள் (juice products) போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் K. செந்தில்ராஜ், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பத்தித் தலைவர் ஹ்ரிகேஷ் ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories